Thunga iravukal தூங்க இரவுகள்

தூங்க இரவுகள்


ஒரு குட்டி நகரம் ஒன்று இருந்துச்சு, என்னைக்கும் இல்லாத நிலையில் அன்று ஒருநாள் அனைவரும் நன்றாக அவர்றவர் வீட்டில் உறங்கி கொண்டிருந்தனர்.  இரவு பொழுது விடியும் தருவாய் எட்டியது. சரியாக அதிகாலை 4 மணிக்கு ஒரு நபர் மனதில் அதிக பயத்துடன் வீட்டை விட்டு வெளியில் வந்தார், அந்த அரகுறையன் இருட்டில் அவர் சிறிது தூரம் நடந்தார். 

திடீரென அவருக்கு இரத்த வாடை அடித்தது. அவர் பயத்தின் உச்சத்தில், அங்கும் இன்குமாய் பார்த்தார். அப்போது அங்கே தரையில் ஒருவர் மிகவும் கோரமான நிலையில் இறந்து கிடந்தார். அந்த இறந்தவரின் உடலை பார்த்தவுடன் இவர் ஒரு அதிக சத்தம் போட்டு அங்கேயே மயங்கி விழுந்தார்.


அவரின் சத்தம் கேட்டு அருகில் இருந்த மக்கள் அனைவரும் எழுந்தனர் மிகவும் பயத்துடன் அனைவரும் அங்கு வந்து பார்த்தனர். யாரு என்று குட தெரியாத நிலையில் அந்த இறந்தவரின் உடல் கிடந்தது. மக்கள் அனைவரும் மனதில் பயத்துடன் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு இருந்தனர். கூட்டத்தில் தலைவராக இருப்பவர் சொன்னார், எப்ப யாராவது போலீசுக்கு கால் பண்ணுங்க, என்று சொன்னார். ராம் ஐயா நான் கால் பன்றேன் சொன்னான். அவனும் அந்த ஊர் தான். ராம் தனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தற்போதுதான் பக்கத்து ஊர் நண்பனுடன் இருவரும் வந்தனர்.


சற்று நேரத்தில் போலீஸ் அந்த இடத்துக்கு வந்து அங்கு இருந்த மக்களை விசாரிக்க தொடங்கியது. யார் முதலில் பார்த்தது என்று கேட்டார் இன்ஸ்பெக்டேர், அந்த மக்கள் அவன் இந்த சடலத்தினை பார்த்தவுடன் பலத்த சத்தத்துடன் அங்கேயே மயங்கி விழுந்தான். அவனை நாங்கள் மருத்துவமைக்கு கொண்டு சேர்த்துள்ளோம். போலீசும் தடயவியல் நிபுணர்களும் அந்த சடலத்தினை கூர்ந்து ஆராய்ச்சி செய்தனர். உடலும் முகமும் பெரிய அளவில் அடையாளம் கண்டுகொள்ள முடியாத வகையில் சிதைந்து இருந்தது. இது போலீசுக்கு மேலும் மிகப்பெரிய தலைவலியாக மாறியது.

அப்போது தான் அந்த ஊர் மக்கள் போலீசாரிடம் ஒரு உண்மையினை கூறினார்.


அது அவர்கள் வளர்க்கும் கோழி, ஆடு, மாடுகள்,பன்றி, போன்ற விலங்குகள் தினம் தினம் இரவில் கொள்ளப்படுவதும் அதனை தடுக்கச்சென்றவர்கள் காணமல் போவதும் தொடர் கதாகியுள்ளது.இதனால் நாங்கள் யாரும் இரவு நேரங்களில் வீட்டைவிட்டு வெளியே வரமாட்டோம் என்றனர். அவர்கள் கூறியதை  ராம் கேட்டார்.  போலீசுக்கு மிகவும் குழப்பமும் , தலைவலி அதிகம் வந்தது. அன்று ஒருநாள் இரவு மக்களும் போலீசும் காவலுக்கு இருந்தனர் . எந்த ஒரு அசம்பாவிதம் நடக்கவில்லை.


அடுத்தநாள் காலையில் இன்ஸ்பெக்டர் வந்தார், இரவு நடந்ததை கூறினார். அப்போது அங்கு ராம் இருந்தார். அவருக்கும் ஒன்றும் புரியவில்லை. இதனை எப்படி கண்டுபிடிப்பது என்று போலீஸ் பார்வை கோணத்தில் நினைத்து கொண்டிருந்தான் ராம். அப்போது அந்த ஊருக்கு ஒரு தபால் காரர் வந்தார், ஒரு தபாலோடு. அவர் சத்தமாக அந்த தபால் யாருக்கு வந்து என்று அவர் பெயர் கூறினார்.  அது ராம் உடைய பெயர் இருந்தது. அதனை வாங்கிய ராம் அவங்க அப்ப அம்மா ஊர் மக்களிடையே சத்தமாக வாசித்தான். 


அது ஒரு வேலைக்கான letter ஆகும். அம்மா அப்பா ந இப்ப போலீசு ஆயிட்டேன் என்று சந்தோசமாக கூறினான். அப்பா ராமனிடம் கோவம்கொண்டர். அவன் படிக்க போவதாக கூறி எனக்கு பிடிக்காத போலீசு ஆய்ட்டான் என்று புலம்பினார். அவரை ராமுவின் அம்மா சமாதானம் செய்தார். ராமு அந்த ஊருக்கே க்ரைம் போலீஸ் ஆக வந்தான். ராமுடைய முதல் கேஸ் அவன் ஊரில் நடந்த அந்த கொலைத்தான். சார்ஜ் எடுத்த ராமு முதல் கட்ட விசாரனை தொடங்கினான்.

முதலில் யார் இந்த உடலை பார்த்து மயங்கியவரை சந்திக்க மருத்துவமனைக்கு சென்றான். அந்த ஊர் கரரிடம் கேள்வி கேட்டான். அவர் இரவில் எனக்கு எங்கேயோ சத்தம் கேட்டது, அதனை கேட்டுத்தான் மனதில் பயத்துடன் வெளியே வந்து பார்த்தேன். அந்த இருட்டில் தூரத்தில் ஒரு ஆள் ஓடுவது போல இருந்தது. சிறிது தூரம் சென்று பார்த்தேன் ,கீழே இந்த சடலம் கிடந்தது. இதை அடுத்து எனக்கு வேறு ஒன்றும் தெரியாது என கூறினான்.

ராமுக்கு இந்த கொலைனை எப்படி கண்டுபிடிக்க போகிறேன் தெரியல என்றபடி தன் பக்கத்து ஊர் நண்பனிடம் கூறினான்.


1. அந்த சடலம் யாருடையது?
2. ஆடு, மாடு ஏன் காணாமல் போகிறது?
3. இரவு நேரத்தில் ஏன் அந்த ஒருவர் வெளிய வந்தார்
4.ஒரு சில பேர் காணமல் போகிறார்கள். அவர்கள் உடல்கள் எங்கே.
5. தர்போது எப்படி இந்த உடல் வந்தது.
6. போலீஸ் இருந்த அந்த ஓரு இரவு ஏன் எதுவும் நடக்கவில்லை.

இரண்டாம் பகுதியில் பார்ப்போம். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்